| ADDED : நவ 23, 2025 04:37 AM
நரிக்குடி: நரிக்குடி மறையூர் அன்ன சத்திரம் நீண்ட கோரிக்கைகளுக்கு பின் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டது. நரிக்குடி மறையூரில் பழமையான ராணி மங்கம்மாள் அன்ன சத்திரம் உள்ளது. வெளியூர்களுக்கு நடந்து செல்லும் மக்கள் தங்கி ஓய்வெடுத்து, பசியாறி மீண்டும் களைப்பின்றி சென்றனர். இச்சத்திரத்தில் பல்வேறு தூண்கள் கலை நயத்துடன் உள்ளன. திருமால் சிலைகள், வில்லேந்திய ராமர், லிங்கம், நாகம் உள்ளிட்ட சிலைகள் இருந்தன. அவைகள் காணாமல் போயின. 100 ஆண்டுகளுக்கு முன் பள்ளியாக செயல்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்தன. யாரும் கண்டு கொள்ளவில்லை. 13 ஏக்கர் பரப்பளவில் இருந்தை மெல்ல ஆக்கிரமித்தனர். கால்நடைகளை கட்டிப்போட்டு அசுத்தப்படுத்தினர். தற்போது முற்றிலும் சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனை புனரமைத்து புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. சிவகங்கை சமஸ்தானம் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நிலங்களை மீட்டு, புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.