மேலும் செய்திகள்
பேர்நாயக்கன்பட்டியில் தெருக்களில் சேதமான ரோடு
22-Dec-2024
சிவகாசி: சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி ராஜதுரை நகரில் பெரும்பான்மையான தெருக்களில் ரோடு சேதத்தால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி ராஜதுரை நகரில் 20 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு பெரும்பான்மையான தெருக்களில் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து நடந்து செல்வதற்கே வழி இல்லை. இதில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது.மழைக்காலங்களில் ரோடு சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. வாறுகாலும் இல்லாததால் கழிவுநீர் ரோட்டிலேயே ஓடுகின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. எனவே ராஜதுரை நகரில் சேதம் அடைந்த ரோடுகளை சீரமைப்பதோடு வாறுகாலும் அமைக்க வேண்டும்.
22-Dec-2024