உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

திருச்சுழி: திருச்சுழி அருகே உடயனம்பட்டியை சேர்ந்தவர் முத்து, 55, இவரது மகள் பாண்டிச்செல்விக்கு இதே ஊரைச் சேர்ந்த சுந்தரம், கிருஷ்ணன் ஆகிய இருவரும் சென்னை ஐ.சி.எப்., நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வாங்கி உள்ளனர்.2021ல், வேலை கிடைத்துவிட்டதாக கூறி இருவரும் போலி நியமன ஆணையை வழங்கி உள்ளனர். சென்னைக்குச் சென்று அந்த நிறுவனத்தில் காண்பித்த போது அங்குள்ள அதிகாரிகள் இது போலியானது எனக் கூறியுள்ளனர்.பின்னர் தான் ஏமாற்றப்பட்டது அறிந்ததும் சுந்தரம், கிருஷ்ணன் ஆகியோரிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.இதையடுத்து முத்து திருச்சுழி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவு படி திருச்சுழி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்