மேலும் செய்திகள்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு
10-Aug-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் வேலை வாய்ப்பு மையம் சார்பாக கருத்தரங்கம் நடந்தது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கிற்கு நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் சங்கரசேகரன், தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராதா வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி கலந்து கொண்டு குரூப் 2 , வங்கி வேலைவாய்ப்புகள், சுய தொழில் வேலை வாய்ப்புகள் பற்றியும், தேர்வுகளுக்கு தயார் செய்வது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் உறுப்பினர்கள் செய்தனர். வேதியியல் துறை தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
10-Aug-2025