உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கான திறன் போட்டிகள்

மாணவர்களுக்கான திறன் போட்டிகள்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் சத்குரு ஸ்ரீ ஞானானந்தா சுகாலயா அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு போட்டிகள் நடந்தது.இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்று யோகா, உடற்பயிற்சி உட்பட பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளை செய்து காண்பித்தனர்.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி செயலர் கே.ஹரிஹரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைவர் ஆர். ஹரிஹரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜசேகர் வரவேற்றார். அலையன்ஸ் சங்க துணை ஆளுநர் பொன் சுப்புராஜ், சங்க செயலாளர் மகா கருப்பையா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர். அறக்கட்டளை அமைப்பாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி