உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துாரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பிளஸ் 1 படித்து முடித்து வீட்டில் இருந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான 23 வயது இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர். இவர்களுக்கு இன்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கயிருந்தது. தகவல் அறிந்த சமூக நல விரிவாக்க அலுவலர் பாப்பா, ஆமத்துார் போலீசார் நேற்று மாலை சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தற்போது சிறுமி பாண்டியன் நகர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை