உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் இல்லாததால் பாழாகுது படிப்பு; எம்.நாகலாபுரம் பெற்றோர் குமுறல்

பஸ் இல்லாததால் பாழாகுது படிப்பு; எம்.நாகலாபுரம் பெற்றோர் குமுறல்

விருதுநகர் : விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் சாத்துார் எம்.நாகலாபுரம் முடித்தலை கிராமத்தில் இருந்து பஸ் வசதி இல்லாததால் மாணவர்களின் படிப்பு பாழாகிறது என பள்ளி மாணவர்களுடன் பெற்றோரும் மனு அளிக்க வந்தனர்.சாத்துார் எம்.நாகலாபுரம் ஊராட்சி முடித்தலை கிராம மக்கள், பள்ளி மாணவர்களோடு வந்துகலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:சாத்துாரில் இருந்து வன்னிமடை வரை பஸ் வருகிறது. அதை எங்கள் கிராமம் முடித்தலை வரை நீட்டித்து மூன்று முறை இயக்க வேண்டும்.10, 11, 12 வகுப்பு படிக்கும் கிராம மாணவர்கள் தேர்வு நெருங்கி கொண்டிருப்பதால் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.அவர்களின் படிப்பு பாதிக்கிறது. ஆகவே எங்கள் ஊருக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும். மேலும் ரேஷன் பொருட்களை பகுதி நேர கடை மூலம்ஊருக்கு வந்து தந்தனர். தற்போது நாகலாபுரம் ஊராட்சிக்கு சென்று வாங்க கூறுகின்றனர். ஆற்றில் நீர்வரத்து உள்ளதால் 30 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும்.எங்கள் பகுதிக்கென நிரந்தர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும், என கேட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை