உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தொல்காப்பிய முற்றோதல்

 தொல்காப்பிய முற்றோதல்

சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் முதுகலை தமிழ்த்துறை தமிழாய்வு மையம், தொல்காப்பியம் மன்றம், மாவட்ட கரிசல் இலக்கிய கழகம் சார்பில் தொல்காப்பிய முற்றோதல் நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். சி.இ.ஓ., அரவிந்தன், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் ஜோதிலட்சுமி, சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகலிங்கம், கரிசல் இலக்கிய கழகம் செயலர் அறம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதுகலை தமிழ் துறை தமிழாய்வு மைய தலைவர் அருள்மொழி வரவேற்றார். சென்னை பெருநகர மாநகராட்சி இணை கமிஷனர் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரி தொல்காப்பியத்தில் இடம்பெற்ற 1610 பாடல்களை 3 மணி 30 நிமிடங்களில் முற்றோதல் செய்தார். புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், தேனி வைகை தமிழ் சங்கம், உலக தொல்காப்பியர் சாதனையாளர்கள் பேரவை, சாதனை கண்காணிப்பு செய்தனர். ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை