உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் பிரச்னையை தீர்ப்பேன் : வேட்பாளர் உலக்குடி செல்வம்

குடிநீர் பிரச்னையை தீர்ப்பேன் : வேட்பாளர் உலக்குடி செல்வம்

நரிக்குடி : ''திருச்சுழி பகுதியில் அரசின் ஒத்துழைப்புடன் குடிநீர் பிரச்னையை தீர்ப்பேன் ,''என, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வேட்பாளர் உலக்குடி செல்வம் கூறினார். திருச்சுழி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 13 வது வார்டில், காங். சார்பில் போட்டியிடும் செல்வம் மனுதாக்கல் செய்தார். இதன்பின் அவர் கூறியதாவது: திருச்சுழி பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்னை உள்ளது. இதை அரசின் ஒத்துழைப்புடன் தீர்த்து வைப்பேன். நரிக்குடி பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பிரச்னையாக இருக்கும் கிருதுமால் நதி பிரச்னையை தீர்க்க போராடுவேன். இதன் மூலம் 300 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெறுவர். திருச்சுழி பகுதிக்கு வந்த கலைக்கல்லூரி பறிமுதல் செய்யப்பட்டு, சாத்தூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் திருச்சுழிக்கு கலைக்கல்லூரி கொண்டு வர முயற்சி செய்வேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை