| ADDED : செப் 23, 2011 01:04 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ''இயற்கையால் ஏற்படும் பேரழிவுகளால், இந்தியாவில் 60 சதவீத வீடுகள் சேதமடைவதாக,'' கலசலிங்கம் பல்கலைபேராசிரியர் மகேந்திரன் தெரிவித்தார். கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் சிவில் துறை சார்பில் நடந்த பேரிடர் மேலாண்மை, மீட்பு தேசிய கருத்தரங்கில், அதன் மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது: உலகில் தென் ஆசியாவில் தான் இயற்கை பேரழிவுகள் அதிகம் ஏற்படுகிறது. இதனால் மனிதனின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. உலகில் இந்தியாவில் தான் பேரழிவுகளால் 60 சதவீதம் வீடுகள் அழியும் சூழல் உள்ளது. ஆனால் யுல் நாடுகளில் இதன் தாக்கத்தால் வீடிழப்பு மிகவும் குறைவு. இதற்கு முக்கிய காரணம் நமது திட்டமிடல், மேலாண்மை செயல்படுத்துவதிலும் ஒருங்கிணைந்த தன்மை இல்லாததே காரணம். இந்தியாவில் வறட்சியால் 16 சதவீதம், வெள்ளத்தால் 12 சதவீதம் பாதிப்புக்குள்ளாகின்றது. இன்றைய இளம் பொறியாளர்கள், சமூகத்தின் நன்மை கருதி, இத்தகைய திட்டமிடல் முறையில் புதுமைகளை காண முயல வேண்டும், என்றார். பதிவாளர் வாசுதேவன் தலைமை வகித்தார். துறை தலைவர் பேராசிரியர் சிவப்பிரகாசம் வரவேற்றார். பேராசிரியர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் மெய்யப்பன் நன்றி கூறினார்.