உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விளையாட்டு வீரர்கள் தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

விளையாட்டு வீரர்கள் தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

விருதுநகர்:தமிழகத்தில், இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ஹாக்கி, கைப்பந்து, டென்னிஸ் வீரர்கள் தேர்வை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில், 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிக்கு மண்டல, மாநில வீரர்கள் தேர்வு போட்டிகள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களால் நடத்தப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முதன்மை உடற்கல்வி ஆய்வாளருக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி, விருதுநகரில் கைப்பந்து, கடலூரில் டென்னிஸ், அரியலூரில் ஹாக்கி போட்டிகளுக்கான ஆண்கள் அணித்தேர்வு நடந்தது. இதில், விருதுநகரில் முறையான தேர்வு நடக்கவில்லை என்றும், அரியலூரில் நடந்த தேர்வில், அனைத்து பிரிவுக்கும் ஒரே தேர்வுக்குழு தேர்வு செய்தது, கடலூர், நெய்வேலியில் இரு தினங்களுக்கு முன் நடத்தப்பட்டதால், தேர்வை ரத்து செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தாலும், வீரர்கள் தேர்வு நடக்கும் போது உயர் அதிகாரிகளின் தலையீடு உள்ளது. போட்டிக்கு தேர்வாகும் மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கல்லுரி சேர்க்கைக்கு முன்னுரிமை வழங்குவதால், தேர்வு போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. இதனால் குழப்பங்களும், உண்மையான வீரர்களை தேர்வு செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ