உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கடும் வெயிலால் நீர்நிலைகள் வற்றியது

கடும் வெயிலால் நீர்நிலைகள் வற்றியது

கடுமையான வெயில், வறட்சியால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி விட்டன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம பகுதிகளில் ஆடுகள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். மழைக்காலங்களில் இவற்றிற்கு தேவையான தீவனங்கள் கிடைக்கும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட்டி சென்று வருவர். அவைகளுக்கு தேவையான குடிநீர் காட்டுப் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஊருணி, கண்மாய் பகுதிகளில் கிடைக்கும். கோடை காலங்களில் நீர்நிலைகள் வறண்டு விடுவதால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் கால்நடைகள் அவதிப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு அரசு 2018ல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் கீழ், கிராம பகுதிகளில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது. பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு தொட்டிகளும் சிறிய கிராமத்திற்கு ஒரு தொட்டி எனவும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் பல கிராமங்களில் இவை பயனற்று கிடக்கிறது. ஒரு சில கிராமங்களில் மட்டும் இவை செயல்பட்டு வருகின்றன. பல கிராமங்களில் தரமற்ற கட்டுமான பணியால் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் தேங்காமல் வெளியேறி விடுகிறது. இதனால் அரசின் நோக்கம், லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்தும் நிறைவேற முடியாமல் உள்ளது. தற்போது கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கால்நடைகள் தண்ணீர் இன்றி தவிக்கின்றன. நீர்நிலைகள் வறண்டு விட்டதால் தண்ணீரைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இன்றி தவிக்கும் கால்நடைகளில் அவல நிலையை கருத்தில் கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமங்களில் ஆய்வு செய்து கால்நடை குடிநீர் தொட்டிகளை புதியதாக அமைத்தும், தண்ணீர் வசதி இல்லாத குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி