உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஐந்து லட்ச ரூபாய் மோசடி: பெண் கைது

வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஐந்து லட்ச ரூபாய் மோசடி: பெண் கைது

சிவகங்கை:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5.40 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை, சிவகங்கை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் வித்தானூரைச் சேர்ந்தவர் லட்சுமி,36. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரைப் பிரிந்து, சிவகங்கையில் மணிமேகு என்பவரை, 2வது திருமணம் செய்துகொண்டார்.மஜீத் ரோட்டில் வாடகைக்கு வீடு பிடித்து, சேலை வியாபாரம் செய்துவந்த இவருக்கு, காமராஜர் காலனியைச் சேர்ந்த அழகர்சாமி மனைவி பஞ்சவர்ணத்துடன் பழக்கம் கிடைத்தது. அவரது கணவர் அழகர்சாமியை வெளிநாடு அனுப்புவதாகக் கூறிய லட்சுமி, அவரிடம் இருந்து, 5.40 லட்ச ரூபாய் பணம் பெற்றார். ஆனால், சொன்னபடி வேலை வாங்கித் தராமல், பணத்தையும் மோசடி செய்துள்ளார்.இதுதொடர்பாக, பஞ்சவர்ணம் அளித்த புகாரின்படி, சிவகங்கை இன்ஸ்பெக்டர் சங்கர், நவநீதன் எஸ்.ஐ., ஆகியோர் லட்சுமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி