உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதவை பெண்ணிடம் இடம் அபகரிப்பு:தி.மு.க., நிர்வாகி கைது

விதவை பெண்ணிடம் இடம் அபகரிப்பு:தி.மு.க., நிர்வாகி கைது

திருச்சி:திருச்சியில், விதவை பெண்ணிடம் இடம் வாங்கி பணம் தராமல், கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க., பகுதி செயலரை, போலீசார் கைது செய்தனர்.திருச்சி திருவானைக்காவல், விக்னேஷ் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்பவர் ஹேமமாலினி, 37. இவருடைய கணவர் ஜெயசீலன், 2007ம் ஆண்டு, கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி, தி.மு.க., மலைக்கோட்டை பகுதி செயலர் மதிவாணனிடம் வாங்கிய கடனுக்கு, கரூர் பை-பாஸ் ரோட்டில் ராயல் சிட்டி கட்டடத்தில் இருந்த, தங்களது 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கடையை, 76 லட்சம் ரூபாய்க்கு கிரயம் செய்து கொடுக்க, ஹேமமாலினி ஒப்பந்தம் செய்தார்.ஹேமமாலினிக்கு, 22 லட்ச ரூபாய் அட்வான்சாகக் கொடுத்த மதிவாணன், மீதத் தொகையான 54 லட்ச ரூபாயை, பிறகு கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி வந்தார்.அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயத்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மதிவாணனிடம் பணம் கேட்டதற்கு, மிரட்டல் விடுத்ததால், ஹேமமாலினி தன் மகளை அழைத்துக் கொண்டு, வெளியூர் சென்றுவிட்டார்.இந்நிலையில், ஹேமமாலினி நேற்று முன்தினம், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் இதுகுறித்து புகார் அளித்தார். விசாரணையில், ஏமாற்றியது உண்மை என்று தெரிய வந்ததை அடுத்து, நேற்று காலை, தி.மு.க., பகுதி செயலர் மதிவாணனை, போலீசார் கைது செய்தனர்.அவரை, 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் மதிவாணன் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை