மேலும் செய்திகள்
ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்
1 hour(s) ago
ரியல் எஸ்டேட் அதிபர் துாக்கிட்டு தற்கொலை
2 hour(s) ago
நகரி: ஆந்திராவில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கோமதிரெட்டியின் ராஜினாமாவை அம்மாநில கவர்னர் ஏற்றுக்கொண்டார். ஆந்திராவை பிரித்து தனி்தெலுங்கானா மாநிலம் அமைத்திடக்கோரி பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில், உள்கட்டமைப்புத்துறை அமைச்சராக இருந்த கோமதிரெட்டி என்பவர் தனித்தெலுங்கானா குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த வாரம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக எம்.எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்தார். அதற்காகன கடித்ததை கவர்னர் நரசிம்மனிடம் அளித்தார். இந்நிலையில் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் பரிந்துரையின் பேரில், அமைச்சர் கோமதி ரெட்டியின் ராஜினாமாவை கவர்னர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார்.
1 hour(s) ago
2 hour(s) ago