உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜனார்த்தனரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி

ஜனார்த்தனரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி

ஐதராபாத்: சுரங்க‌ மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீதான ஜாமின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் சி.பி.ஐ. காவலில் எடுத்துவிசாரிக்க செப்.19-ம் வரை அனுமதியளித்தது. கர்நாடகாவில் சுரங்க மோசடியில் ஈடுபட்டதாக அம்மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி, அவரது உறவினர் ஸ்ரீனிவாசரெட்டி ஆகியோ‌ர் சி.பி.ஐ.யினால் கடந்த 5-ம் தேதியன்று கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமி்ன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்டில் விசாரணைக்கு வந்தது. இதில் இருவரின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க செப்.19-ம் தேதி வரை அனுமதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை