உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., கட்சிக்கு முஸ்லிம் லீக் ஆதரவு

காங்., கட்சிக்கு முஸ்லிம் லீக் ஆதரவு

சிவகாசி:உள்ளாட்சித் தேர்தலில் காங்., கட்சிக்கு, விருதுநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.விருதுநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைவர் இப்ராகீம்ஷா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலர் அப்துல் ஹக்கீம் வரவேற்றார். பொருளாளர் முகமது இஸ்மாயில் உட்பட, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.உள்ளாட்சித் தேர்தலில் காங்., கட்சியை ஆதரிப்பது, வெற்றிக்கு பாடுபடுவது, விருதுநகர் மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள், கட்சியின் தனி சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை