உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்களையும் துரத்தும் முழங்கால் மூட்டு வலி

இளைஞர்களையும் துரத்தும் முழங்கால் மூட்டு வலி

சென்னை:''வயதானவர்களை மட்டுமே தாக்கும் மூட்டு தேய்மான நோய், தற்போது இளைஞர்களை தாக்க துவங்கியுள்ளது,'' என, முடநீக்கியல் மருத்துவர் கோவிந்தராஜ் கூறினார்.உலக மூட்டு நோய் தினத்தை முன்னிட்டு, 'முழங்காலை தெரிந்து கொள்ளுங்கள்' என்னும் விழிப்புணர்வு கருத்தரங்கு சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடந்தது. இதில், நோயை முற்றிவிடாமல், துவக்கத்திலேயே கண்டறிந்து பாதுகாப்பது குறித்து விளக்கப்பட்டது.இதுகுறித்து, கெஸ்ட் மருத்துவமனை முடநீக்கியல் மருத்துவர் கோவிந்தராஜ் கூறியதாவது:முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயான முதுமை மூட்டு தேய்மான நோய், தற்போது இளைஞர்களையும் தாக்க துவங்கியுள்ளது. இயந்திரத்தனமான வாழ்க்கை, நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே பணியாற்றுதல் மற்றும் அதீத உடல் எடை இதற்கு காரணம்.முதுமை மூட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, மூட்டுகளில் சிநோவியல் திரவக் குறைபாடு இருக்கும். மூட்டுகளில் உள்ள இந்த திரவம் தான், எலும்புகள் ஒன்றன் மீது ஒன்று வழுக்கி கொண்டு அசைவதற்கு உதவும். சிநோவியல் திரவக் குறைபாட்டை, விஸ்கோ சப்ளிமென்டேஷன் என்ற சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். இந்த சிகிச்சை நோயாளிகள் இயல்பு வாழ்க்கை வாழவும், நோயின் தீவிரத்தை தள்ளி போடவும் உதவும்.இவ்வாறு மருத்துவர் கோவிந்தராஜ் கூறினார்.அப்பல்லோ மருத்துவமனையின் முடநீக்கியல் மருத்துவர் விஜய் சி போஸ் கூறும் போது, ''முழங்கால் மூட்டு வலி நோயை குணப்படுத்த நோயாளிகள் பல்வேறு வலி நிவாரண மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இவை சிறிது நேரத்திற்கு மட்டுமே வலியை குறைக்கும். ஆனால், நோயை குணப்படுத்தாது. மூட்டு நோய் முற்றி, அறுவை சிகிச்சையை தவிர வேறு வலி இல்லாத நிலையில் தான், மருத்துவர்களை நாடுகின்றனர்,'' என்றார்.முழங்கால் மூட்டு வலி பாதிப்பு எப்படி?70 வயதுக்கும் மேற்பட்டோர்40 சதவீதம் முழங்கால் மூட்டு வலி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.80 சதவீதம் மூட்டுகளை அசைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.25 சதவீதம் தங்களின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் திணறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை