மேலும் செய்திகள்
எச்.ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு: அப்பல்லோ மருத்துவமனை தகவல்
4 hour(s) ago | 3
சென்னை: தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசு கேபிள் திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைபடுத்தப்பட்டால் அதை பா.ம.க., வரவேற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் விழாவில் பேசிய அவர், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் பா.ம.க.,வின் பலம் குறைந்து விட்டது. எனவே இனி தனித்து மட்டுமே போட்டியிட பா.ம.க., முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அரசு கொண்டுவந்துள்ள அரசு கேபிள் திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைபடுத்தப்பட்டால் அதை பா.ம.க., வரவேற்கும் என்றும் மணி தெரிவித்தார்.
4 hour(s) ago | 3