மேலும் செய்திகள்
எச்.ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு: அப்பல்லோ மருத்துவமனை தகவல்
4 hour(s) ago | 3
தூத்துக்குடி:கோவில்பட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், இந்நகராட்சியில் 18வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இக்கட்சி சார்பில் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் இருவர், இறுதிப் பட்டியலில் இவரது பெயர் உள்ளதாகக்கூறி பிரேமாவிடம் ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கினர். சந்தேகமடைந்த பிரேமா, அதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் விசாரித்தபோது, அவரது மனு வாபஸ் பெறப்பட்டது தெரியவந்தது. இதே வார்டில் வேறொருவருக்கு போட்டியிட வாய்ப்பு தருவதற்காக நிர்வாகிகள், பொய் கூறி பிரேமாவிடம் வாபஸ் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கியது தெரியவந்தது. இதைகண்டித்து, பிரேமா ஆதரவாளர்களுடன் அங்கு சாலைமறியல் செய்தார். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
4 hour(s) ago | 3