உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டிக்கு மாறும் விஜய் கட்சி மாநாடு

விக்கிரவாண்டிக்கு மாறும் விஜய் கட்சி மாநாடு

விக்கிரவாண்டி:நடிகர் விஜய் கட்சியின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை வரும் 22ல் நடத்த, அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இடம் தேர்வு செய்துள்ளனர். நடிகர் விஜய் துவுங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி, வரும் 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நடிகர் விஜய், மாநில செயலர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலொசனை நடத்தினர். அதையடுத்து, கட்சிக்கான முதல் மாநாட்டை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதற்கான இடமாக திருச்சி தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தைக் கேட்டு, ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் கொடுத்தனர்; ஆனால், இதுவரை அனுமதி வரவில்லை. இதனால், மாநில செயலர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடம் பேசினார். பின், விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை பைபாசில் உள்ள தனியாருக்கு சொந்தமான 85 ஏக்கர் இடத்தில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த முடிவெடுத்து, விஜய் ஒப்புதலுக்காக காத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விக்கிரவாண்டி இடத்தில் கடந்த 2021ல் அ.தி.மு.க., சார்பில் மாநாடு நடத்த முன்னாள் அமைச்சர் சண்முகம் பூஜைகள் போட்டு பணியை துவக்கினார். அந்த நேரத்தில், சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், மாநாடு நடைபெறவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் கடலுார் , விழுப்புரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இந்த இடத்தில் தான் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிட தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை