உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு கேபிள்:ஆப்பரேட்டர்களுக்கு சிக்கல்

அரசு கேபிள்:ஆப்பரேட்டர்களுக்கு சிக்கல்

தேனி:அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பு துவக்கப்பட்டுள்ளதால், ஆப்பரேட்டர்களுக்கு 'புதிய சிக்கல்' ஏற்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு துவக்கப்பட்டுள்ளது. இணைப்பிற்கு 70 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் அரசுக்கு 20 ரூபாயும், ஆப்பரேட்டர்களுக்கு 50 ரூபாயும் செல்கிறது. பல ஆப்பரேட்டர்கள் இணைப்புகளை குறைத்து காட்டி வந்தனர். இதுவரை 170 முதல் 200 ரூபாய் வரை வசூலித்தவர்கள், இனிமேல் இவர்கள் 70 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடியும். மறைக்கப்பட்ட இணைப்புகளுக்கும் 70 ரூபாய் வசூலிப்பதால் அதிக இழப்பு ஏற்படும். கேபிள் இணைப்புகள் குறித்து மறு கணக்கெடுப்பு நடத்த உள்ளதால் எண்ணிக்கையை மறைத்த ஆப்பரேடர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை