உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறுவை தொகுப்பு திட்டம் பழனிசாமி, ராமதாஸ் கண்டனம்

குறுவை தொகுப்பு திட்டம் பழனிசாமி, ராமதாஸ் கண்டனம்

சென்னை:'அவசர கோலத்தில் குறுவை தொகுப்பு அறிவித்திருப்பது, தி.மு.க., அரசின் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஜெயலலிதா அரசில், குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட இயலாத சூழ்நிலை ஏற்பட்டபோது, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காலத்திற்கு ஏற்ற தேவைகளை கருத்தில் வைத்து, தி.மு.க., அரசு குறுவை தொகுப்பை திட்டமிட்டு அறிவித்திருக்க வேண்டும்.நேற்று முன்தினம் அறிவித்த குறுவை தொகுப்பில், பெரும்பகுதி விதை நெல் மானியம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாசனத்திற்கு தண்ணீரே இல்லாத நிலையில், விவசாயிகள் விதை நெல்லை வாங்கி, எங்கே நாற்றங்கால் தயார் செய்வர் என்ற அடிப்படை யோசனை கூட, அரசுக்கு இல்லை.அ.தி.மு.க., ஆட்சியில், மழையும், பாசன நீரும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டபோது, குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு முழுமையாக செய்யப்பட்டு, விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டது. தி.மு.க., அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக, குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யவில்லை.தமிழகம் முழுதும் மின்சாரம் முழுமையாக வழங்க இயலாத நிலையில், டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு, மும்முனை மின்சாரம் வழங்கப்படுமா என்று குறுவை தொகுப்பில் எந்தக் குறிப்பும் இல்லை. 'இண்டியா' கூட்டணியில் உள்ள, கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, நமக்குரிய பங்கு நீரை பெறத் தவறிய, தங்கள் குற்றத்தை மறைப்பதற்கான கண்துடைப்பு வேலைதான், குறுவை தொகுப்பு அறிவிப்பு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'பாரபட்சம் கூடாது!'

காவிரி டெல்டா விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய, 78.67 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் விதை நெல் மானியமும், இயந்திர நடவு மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. அதேபோல், உதவியை முழுமையாக வழங்காமல் பகுதியாக வழங்குவது, விவசாயிகளுக்கு பயனளிக்காது.இயந்திர நடவு மானியம், உர மானியம் மிகக் குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தேவையான தடையற்ற மும்முனை மின்சாரம் குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை, எனவே, எந்த பாரபட்சமும் காட்டாமல், குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். தடையற்ற மும்முனை மின்சாரம், இயந்திர நடவு மானியம், ஜிப்சம் உர மானியத்தை முழுமையாக வழங்க வேண்டும்.ராமதாஸ்,நிறுவனர், பா.ம.க.,***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை