உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10.5 சதவீத இடஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு தான் பாதிப்பு!

10.5 சதவீத இடஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு தான் பாதிப்பு!

'வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிப்பு ஏற்படும்' என, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புது விளக்கம் அளித்துள்ளார்.விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு, தி.மு.க., எதிர்ப்பாக இருப்பதை போல பிரமையாக காரணம் காட்டி, தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த இடஒதுக்கீட்டிற்கு தி.மு.க., எதிரி அல்ல. ஒரு விளக்கத்தை சொல்கிறேன். இந்த, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டால், வன்னிய மக்களுக்கு தான் நஷ்டம். அரசாங்கம் கணக்கெடுத்து விட்டது.திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, வந்தவாசியில் உள்ள அரசு கல்லுாரிகளுக்கு போய் கணக்கெடுங்கள். அங்கு, 37 சதவீத அளவிற்கு வன்னியர்கள் படிக்கின்றனர்.எனவே, 10.5 சதவீதம் மட்டும் அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால், மீதி இடங்கள் பொது பட்டியலுக்கு சென்று விடும். விழுப்புரம் மாவட்ட ரேஷன் கடைகளை எடுத்து கொண்டால், 40 சதவீதத்திற்கு மேல் வன்னியர்கள் தான் விற்பனையாளர்களாக பணிபுரிகின்றனர். செஞ்சி டிப்போவிலும், இதேபோல உள்ளனர். எனவே இடஒதுக்கீட்டால், வன்னியர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். தேர்தல் முடிந்தவுடன், கணக்கெடுத்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.- ---எ.வ.வேலுபொதுப்பணித்துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை