மேலும் செய்திகள்
17 ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு
2 hour(s) ago
வேங்கடகுளம்:புதுக்கோட்டை மாவட்டம், வேங்கடகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, போதுராஜா, 47. இவர் புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் மீன் வெட்டும் தொழில் செய்தார். கடந்த - 2015 அன்று, புதுக்கோட்டையில் இருந்து வேங்கடகுளத்திற்கு பைக்கில் சென்ற போது, புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில், நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது இறந்தார்.பாலம் கட்டும் பணி நடந்த இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததே விபத்திற்கு காரணம் என கூறி, போதுராஜா மனைவி வெள்ளையம்மாள் மற்றும் வாரிசுகள், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், மாவட்ட முதன்மை நீதிபதி பூரணஜெயஆனந்த் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். அதில், முறையான எச்சரிக்கை பலகை வைக்காத, பாலம் கட்டுமான ஒப்பந்ததாரர் முருகேசன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், 17.33 லட்ச ரூபாயை, இரண்டு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
2 hour(s) ago