மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
திருப்பத்துார்: திருப்பத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து, நேற்று, 40 பயணியருடன் நாட்றம்பள்ளி நோக்கி அரசு பஸ் சென்றது. பஸ்சை டிரைவர் ஜீவா, 48, ஓட்டினார்.கண்டக்டர் சவுந்தர்ராஜன், 50, பணியில் இருந்தார். காட்டேரி அருகே பஸ் சென்ற போது, டிரைவர் ஜீவாவின் மொபைல் போனிற்கு அழைப்பு வந்தது.அதை எடுத்து பேசிக்கொண்டு பஸ்சை ஓட்டினார். அப்போது எதிரே பைக் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க, இடதுபுறமாக பஸ்சை திருப்பினார்.அப்போது நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தின் மீது பஸ் மோதியது. இதில், 13 பெண்கள், நான்கு ஆண்கள், 2 வயது குழந்தை என, 18 பேர் படுகாயம்அடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
2 hour(s) ago