உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

கள்ளச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% மெத்தனால் கலந்துள்ளது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=spp9s2hk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 229 பேர், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், 150 பேர் குணமடைந்தனர். 65 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து சாராய வியாபாரி, மெத்தனால் சப்ளையர்கள் என, 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக, தமிழக அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% மெத்தனால் கலந்துள்ளது என சென்னை ஐகோர்ட்டில் இன்று (ஜூலை 03) தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அறிக்கையில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: கள்ளச்சாராயத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 132 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி.,யின் 6 குழுக்கள், உள்ளூர் போலீஸ் 3 குழுக்கள் விசாரித்து வருகிறது. தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மெத்தனால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்டசபையில் அ.தி.மு.க., கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசில் குறிப்பிட்ட எந்த தகவல்களும் இல்லை.

சி.பி.ஐ., விசாரணை அவசியமில்லை

மரக்காணம் சம்பவத்தின் தொடர்ச்சி என சொல்ல முடியாது. மரக்காணம், செங்கல்பட்டு சம்பவத்தில் கள்ளச்சாராயத்தில் 99% மெத்தனால் கலந்தது கண்டறியப்பட்டது. சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை. விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சி.பி.ஐ.,க்கு மாற்ற முடியும். கள்ளச்சாராய வழக்கில் விசாரணை சரியான முறையில் விரைவாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தமிழ்வேள்
ஜூலை 03, 2024 20:43

வாய் மேலயே ரெண்டு அடி போடுங்க எசமான்....அதி போதை சட்டம் கடந்த மது- அவ்வளவுதான்..இதப்போய் வாய் கூசாமல் கள்ள சாராயம் ன்னு சொல்றாங்க...


அப்புசாமி
ஜூலை 03, 2024 17:10

கேட்டுக்கோங்கடா. கள்ளச்சாராய குடிகாரர்கள். ஒரு 10 பர்சண்ட் மெத்தனால் கலந்து விக்கணும்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 03, 2024 16:49

சாராய விடியலின் சிறப்பான ஆட்சியில் மிக அதிக சாராய சாவுகள் கண்டு சாதனை படைப்போம்.


Naga Subramanian
ஜூலை 03, 2024 16:41

ஒருவேளை பஜக காரர்கள் கலந்திருப்பார்களோ என்ற அய்யச் செய்தியையம் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். இப்படித்தான் செல்லும் இந்த பாதை. முழு பூசணியை சோற்றில் மறைத்து விடுவார்கள்.


Mettai* Tamil
ஜூலை 03, 2024 16:41

மரக்காணம் சம்பவத்தின் தொடர்ச்சி என சொல்ல முடியாது. மரக்காணம், செங்கல்பட்டு சம்பவத்தில் கள்ளச்சாராயத்தில் 99% மெத்தனால் கலந்தது கண்டறியப்பட்டது. சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை. மரக்காணத்திற்கும், கள்ளக்குறிச்சிக்கும் 150 km தூரம் உள்ளது.மேலும் 29.7% மெத்தனால் கலந்தது கண்டுபிடித்துவிட்டோம் .மரக்காணம், செங்கல்பட்டு சம்பவத்தில் கள்ளச்சாராயத்தில் 99% மெத்தனால் கலந்தது கண்டறியப்பட்டது. மரக்காணத்தை விட , இங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூடுதல் . பிறகு எப்படி மரக்காணம் சம்பவத்தின் தொடர்ச்சி என சொல்ல முடியும் .முன்னேற்றம் தானே.. அடுத்து சாராய வியாபாரி யார், எதர்க்காக காய்ச்சி னார்கள் ,மக்கள் ஏன் குடித்தார்கள் ,இவர்களின் பின்னணி என்ன எல்லாமே எங்களுக்கு விரல் நுனியில் உள்ளது .அதனால் வீண் செலவு செய்து, பொருளாதார வீழ்ச்சியை தடுக்க, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை யுவர் ஆனர் அவர்களே .......


என்றும் இந்தியன்
ஜூலை 03, 2024 16:21

மரக்காணத்தில் 99% மெத்தனால் கலப்பு ஆனால் இறப்பு 23 பேர்???கள்ளக்குறிச்சியில் 8.6% முதல் 29.7% வரை மட்டுமே மெத்தனால் கலப்பு ஆனால் இன்று வரை இறந்தவர்கள் 65 பேர். திராவிட மடியல் அரசு ஆட்சியில் தலைமுதல் கால் வரை, அதிக விஷம் கலந்தால் குறைந்த இறப்பு, குறைந்த விஷம் கலந்தால் நிறைய இறப்பு.


Gurumurthy Kalyanaraman
ஜூலை 03, 2024 14:54

கள்ளச்சாராயம் இன்னும் ஜோராக விழுப்புரம் பஸ் சட்டத் மற்றும் முண்டியம்பாக்கத்தில் விற்கப்படுவதாக டிவி, விடீயோக்களுடன் இன்று ஒளி பரப்பியது. போலீஸ்காரரகளின் சோம்பல் இந்த அரசிற்கு மேலும் தலை வலி உண்டாக்க காத்திருக்கிறது.


என்றும் இந்தியன்
ஜூலை 03, 2024 16:12

போலீஸ் உங்களுக்கு நன்றி சொல்லி விழுப்புரம் சென்று கள்ளச்சாராய வியாபாரிகளிடம் நல்ல கமிஷன் வசூலிப்பார்கள், அதில் ஒரு பங்கு திருட்டு திராவிட அரசுக்கு கொடுத்து விட்டு கமிஷன் கிடைத்ததை கொண்டாடுவார்கள் அரசியல்வாதிகள் நீதித்துறை அரசு அதிகாரிகள் இவர்களின் மொத்த அஜெண்டா என்ன ஜனசேவை இவர்கள் செய்வது என்ன பணசேவை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை