உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெடிகுண்டு வீசி வெல்டரை கொல்ல முயற்சி மேட்டுப்பாளையம் அருகே சிறுவன் வெறிச்செயல்

வெடிகுண்டு வீசி வெல்டரை கொல்ல முயற்சி மேட்டுப்பாளையம் அருகே சிறுவன் வெறிச்செயல்

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் அருகே வெல்டரை, சிறுவன் கத்தியால் வெட்டி, நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி, மேட்டுப்பாளையம் அடுத்த சாணரப்பேட்டை மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வீரமணி, 45; வெல்டர். இவரது சகோதரர் மகன் விக்ரம். நேற்று முன்தினம் மதியம் வீரமணி வீட்டின் முன்பு விக்ரம் நின்றிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பைக்கில் வேகமாக சென்றார். ஏன் வேகமாக செல்கிறாய் என விக்ரம் கேட்டார். அதற்கு சிறுவன் அப்படி தான் செல்வேன் என கூறிவிட்டு சென்றார்.பின்னர், அங்குள்ள கோவில் அருகில் நின்றிருந்த விக்ரமை, 17 வயது சிறுவன் என்னையே வழிமறித்து கேள்வி கேட்கிறாயா என கேட்டு தாக்கினார். அதனை அறிந்த வீரமணி, சிறுவனை பிடித்து கண்டித்தார்.ஆத்திரமடைந்த சிறுவன், அன்று நள்ளிரவு 1:30 மணிக்கு வீட்டின் முன் துாங்கிக் கொண்டிருந்த வீரமணியின் கையை கத்தியால் வெட்டினார். பின்னர், தான் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டை வீரமணி மீது வீசினார். அது பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே, சிறுவன் தப்பிச் சென்றார். படுகாயம் அடைந்த வீரமணியை அப்பகுதி மக்கள் மீட்டு ஜிப்மரில் சேர்த்தனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார், வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற பிரிவில் வழக்கு பதிந்து சிறுவனை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 12, 2024 12:25

சிறுவன் கையில் கிடைக்கும் அளவுக்கு வெடிகுண்டு சர்வசாதாரணமாகி விட்டது தமிழகத்தில் சரக்கு, போதைப்பொருள் வரிசையில், இப்பொழுது நாட்டு வெடிகுண்டு ஆஹா, என்ன சிறப்பான வளர்ச்சி திமுக ஆட்சியில் மெச்சுக்கணும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை