| ADDED : ஜூலை 02, 2024 09:21 PM
சாத்தான்குளம்:சாத்தான்குளம் அருகே வளர்ப்பு நாய்களுக்கான ஓட்டப் பந்தயத்தில் மஹாராஷ்டிரா கோல்டன் குரூப்பைச் சேர்ந்த லக்கி டிரா நாய்க்கு முதல் பரிசு கிடைத்தது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடாட்சபுரத்தில் சிசர் ரேஸிங் கிளப் சார்பில் வளர்ப்பு நாய்க்களுக்கான ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. கவுண்ட், சிப்பிப்பாறை உட்பட 60 வகையான நாய்கள் போட்டியில் பங்கேற்றன. மஹாராஷ்டிரா கோல்டன் குரூப் லக்கி டிரா நாய் முதல் பரிசும், சீசர் ரேஸிக் குருப் ஹீரோ நாய் 2வது பரிசும், மகாராஷ்டிரா கோல்டன் குரூப் ஆல்சூபாய் நாய் 3வது பரிசும், ஏ.கே.ராக்கி ரேஸ் கிளப் ரோக்கீலா நாய் 4வது பரிசும் பெற்றன. வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களிடம், சாத்தான்குளம் டி.எஸ்.பி., பரிசுகளை வழங்கினார்.