உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உரிமை மீறல் நோட்டீஸ் ரத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை:சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து, சட்டசபை செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.கடந்த 2017ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்றதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் நோட்டீசை உரிமைக்குழு அனுப்பியது. இதை எதிர்த்து, ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமைக் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது.இதை எதிர்த்து, சட்டசபை செயலர் மற்றும் உரிமைக்குழு சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தன.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''கடந்த 2017ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முந்தைய சட்டசபையின் பதவிக்காலம், 2021ல் முடிந்து விட்டது. நோட்டீஸ் விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். அதனால், அவரது முடிவுக்கு விட்டுவிட வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, 'நீதிமன்றம், சட்டசபைக்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஒன்றோடு ஒன்று தலையிடக்கூடாது. 'நோட்டீஸ் மீது இறுதி முடிவெடுக்கப்படாத நிலையில், அதில் தலையிட்டு ரத்து செய்தால், அது ஆபத்தானது; தவறான முன்னுதாரணமாகி விடும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கின் உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ