உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., வரக்கூடாது என்பதில் அ.தி.மு.க.,- தி.மு.க., கூட்டணி அர்ஜுன் சம்பத் பேச்சு

பா.ஜ., வரக்கூடாது என்பதில் அ.தி.மு.க.,- தி.மு.க., கூட்டணி அர்ஜுன் சம்பத் பேச்சு

ராஜபாளையம்:பா.ஜ., உள்ளே வரக்கூடாது, என்பதில் அ.தி.மு.க.,- தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது என ராஜபாளையத்தில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒரே இரவில் வாக்காளர்களுக்கு பணத்தையும் பரிசு பொருட்களையும் கொடுக்கக்கூடிய கட்டமைப்பு அ.தி.மு.க., தி.மு.க., விடம் உள்ளது. தி.மு.க.,விடம் லாட்டரி, சாராயம், போதை பொருள், கனிம வள கொள்ளையினால் வந்த பணம் குவிந்து கிடக்கிறது. அதிகார பலத்தையும் பண பலத்தையும் நம்பி தேர்தலை சந்திக்கிறது.இரு திராவிட கட்சிகளின் பொய்யை முறியடிக்க வேண்டும். பா.ஜ., உள்ளே வரக்கூடாது, என்பதில் அ.தி.மு.க.,- தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது.இந்த இரு கட்சிகளையும் ஒன்று சேர்த்து விட வேண்டும் என ஒரிசாவில் இருந்து வந்த பிஜூ பட்நாயக் முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் இன்று அண்ணாமலை அவர்களை ஒன்று சேர்த்து விட்டார்.தமிழகத்தில் ஜாதி பிரச்னையை துாண்டி விட்டு திராவிட கட்சிகள் குளிர் காய்ந்து கொண்டிருந்தது. பா.ஜ., கூட்டணி , மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.கடந்த முறை வெற்றி பெற்ற தி.மு.க., கூட்டணியை சேர்ந்த 38 எம்.பி.,க்கள் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை