மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
சென்னை:முன்கூட்டியே விடுதலை கோரும் கைதிகளின் விண்ணப்பங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் விரைந்து பரிசீலிக்கும்படி, சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.வேலுார் மத்திய சிறையில் உள்ள தன் கணவர் ஈஸ்வரனை, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, கடந்த மாதம் அனுப்பிய மனுவை அரசு பரிசீலிக்கக் கோரி, யசோதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதிகாரிகள் கடமை
இம்மனுவை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:முன்கூட்டியே விடுதலை கோரிய விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிப்பதை உறுதி செய்ய வேண்டியது, அதிகாரிகளின் கடமை. நியாயமான கால அவகாசத்துக்குள், இந்த நடவடிக்கை முடிக்கப்பட வேண்டும்.விண்ணப்பங்களை பைசல் செய்யக்கோரி வழக்கு தொடுக்கும் நடைமுறை உள்ளது. அதிகாரிகளுக்கு மனு அனுப்பிய உடனேயே, வழக்கும் தாக்கல் செய்யப்படுகிறது; சில மாதங்களுக்குப் பின்னும் தாக்கல் செய்யப்படுகிறது. முன்கூட்டி விடுதலை கோரியோ அல்லது வேறு எந்தப் பிரச்னைக்கும் நிவாரணம் கோரியோ அனுப்பப்படும் விண்ணப்பங்களை, உரிய அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் மீது சீனியாரிட்டி அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். பாகுபாடு இருக்காது
அப்போது பாகுபாடு தவிர்க்கப்படும். கைதிகள் சார்பில் அளிக்கப்படும் முறையீடுகளை பரிசீலிப்பதில், எந்த பாகுபாடும் இருக்க முடியாது.கைதிகள் சிலர் உயர் நீதிமன்றத்தை அணுகி, தங்கள் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான உத்தரவை பெறுகின்றனர். மற்றவர்களுக்கு உயர் நீதிமன்றத்தை அணுக முடியாத நிலை இருக்கலாம். அவர்களின் நிலையையும், நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கும், எந்த பாகுபாடும் இன்றி, ஒரே மாதிரியாக தீர்வு காணப்பட வேண்டும். சுற்றறிக்கை
நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை சீனியாரிட்டி அடிப்படையில் பரிசீலித்து தகுதி அடிப்படையில் விரைந்து பைசல் செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில், நான்கு வாரங்களுக்குள் சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை, புதிய மனுவை, மனுதாரர் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
3 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
14 hour(s) ago