உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேலும் ஒரு பள்ளி மீது வழக்கு

மேலும் ஒரு பள்ளி மீது வழக்கு

கோவை,:கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு, சாய்பாபா காலனியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி, மாணவர்களை அழைத்து வந்ததாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வடவள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மாணவர்களும், ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றதாக, விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக அந்த பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.தொடர்ந்து கோவை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்படி, பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் குழந்தைகளை தவறாக வழி நடத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை