உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வக்பு வாரிய சட்ட திருத்தம் யாருக்கும் எதிரானது அல்ல

வக்பு வாரிய சட்ட திருத்தம் யாருக்கும் எதிரானது அல்ல

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வக்பு வாரிய சட்ட திருத்தம், அனைத்து சமூக மக்கள் நலனையும் உள்ளடக்கிய சட்டமாகவே உள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ypr1vjr2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவரது அறிக்கை:

வக்பு வாரிய சட்டத்தில், மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வர உள்ளது. இதுகுறித்து, பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், மத்திய அமைச்சரை சந்தித்து முழு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் உண்மையை அறியாமல், பொதுமக்களை திசை திருப்ப, சட்ட திருத்தத்தை எதிர்க்கின்றன. இந்தியாவில், அதிக நிலம் வைத்திருப்பதில் ராணுவம், ரயில்வேக்கு அடுத்து வக்பு வாரியம் தான் உள்ளது. மொத்தம், 9.40 லட்சம் ஏக்கர் நிலம் வக்பு வாரியத்திடம் உள்ளது. சமீபத்தில் திருச்சியில் உள்ள திருச்செந்துறை கிராமம் முழுதும், வக்பு வாரியத்தின் சொத்து என கூறிவிட்டனர். ஆனால், திருச்செந்துறையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவில், 1,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அப்படி இருக்கும்போது, திருச்செந்துறை கிராமம் எப்படி வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக இருக்க முடியும்? திருச்சி, வேலுார் உட்பட தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் இந்த பிரச்னை நிலவுகிறது.குறிப்பிட்ட நிலத்தின்உரிமையாளர் அந்த நிலத்தை விற்கும்போது, அது வக்பு வாரிய சொத்து என்று அறிவிக்கப்பட்டால், நிலத்தின் உரிமையாளர் வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்று, பதிவாளர் அலுவலகத்தில் வழங்கினால் மட்டுமே நிலத்தை விற்க முடியும் நிலை தற்போது உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்னைகள், வக்பு வாரிய சட்ட திருத்தம் வாயிலாக சரி செய்யப்படும். இதனால், சமூகத்தில் அமைதி நிலவும்; இஸ்லாமியர்களுக்கு நன்மை கிடைக்கும். இந்த சட்ட திருத்தம், யாருக்கும் எதிரானது அல்ல. அதனால், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வழக்கம் போல இந்த விஷயத்திலும் திசை திருப்பல் நாடகத்தை அரங்கேற்றக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

R.Varadarajan
ஆக 09, 2024 02:27

இந்து விரோத சக்திகளுக்கு எதிரானது, இப்படியே விட்டால் இந்துக்களுக்கு சொத்துரிமை பறி போய்விடும். இந்துக்களுக்கு விழிப்புணர்வு அவணியம் இப்போது


Ramesh Sargam
ஆக 08, 2024 22:46

எதிர்க்கட்சிகள் வெறும் ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது.


Ramesh Sargam
ஆக 08, 2024 20:37

யாருக்கும் எதிரானது அல்ல என்று எதிர்கட்சியினருக்கும் நன்றாக தெரியும். ஆனால், மத்திய அரசு எதை செய்தாலும் அதை எதிர்க்கவேண்டும் என்பதால் அதை எதிர்க்கிறார்கள். எதிர்கட்சியினரை விட்டுத்தள்ளுங்கள். வாய் வலிக்கும்வரை வரை ஒன்று குறைக்குமாம். பிறகு வாய் வலிக்க ஆரம்பித்தவுடன் அது சும்மா ஒரு மூலையில் வாலை சுருட்டிக்கொண்டு படுத்துக்குமாம். அதுபோல...


பேசும் தமிழன்
ஆக 08, 2024 19:13

நாட்டுக்கு நன்மை தரும் எதுவாக இருந்தாலும்... இந்தி கூட்டணி ஆட்கள் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்... இது ஒன்றும் புதிதல்ல..... அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால்... அதில் கண்டிப்பாக நாட்டு நலன் இருக்கும் !!!


venugopal s
ஆக 08, 2024 15:53

சாதாரண பொது மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் உள்ள சட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை மாற்றி முறைப்படுத்துதல் அவசியமே! பாஜகவுக்கு பாராட்டுகள்!


அப்பாவி
ஆக 08, 2024 12:56

முன்னாள் ஐ.பி.எஸ் ஆளுங்க தேர்தலில் நிற்கத் தடைன்னு சட்டம் கொண்டாரலாம். யாருக்கும் எதிரானதான்னு பாக்கலாம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 13:52

ந்யூஸ் ரீடர் கிட்டே தப்பா நடந்தவங்க தேர்தல்ல நிக்கக்கூடாதுன்னும் சட்டம் கொண்டுவரலாம்தான் ....


Venkatesan Srinivasan
ஆக 08, 2024 16:38

பிறவியிலேயே இருநூறு ரூபாய் கொத்தடிமைகள் கண்டிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் காம்பெளண்ட்டை கண்டிப்பாக மிதித்து இருக்க மாட்டார்கள் என்ற இறுமாப்பு?


பேசும் தமிழன்
ஆக 08, 2024 19:15

200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு இப்படி முட்டு கொடுக்க கூடாது..... நீங்கள் அப்பாவியாகவே இருங்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 12:39

நீங்க சொல்லிட்டா இஸ்லாமியர்கள் நம்பிடுவாங்க ......


நிக்கோல்தாம்சன்
ஆக 08, 2024 12:17

ஹலால் மாதிரி இதுவும் ஒரு திணிப்பா ?


Swaminathan L
ஆக 08, 2024 11:35

இந்தச் சட்டத் திருத்தம் காலத்தின் கட்டாயம். உண்மையான சொத்துக்கள் என்னென்ன என்று வரையறை செய்ய வேண்டியிருக்கிறது.


ஆரூர் ரங்
ஆக 08, 2024 11:02

முகலாய மன்னர்கள் போர் மூலம் அபகரித்த இந்து அறநிலையங்களின் சொத்துக்களை அறக்கட்டளை சொத்தாக கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த நியாய விரோத செயல் ஏற்கத்தக்கதல்ல. அச்சொத்துக்களை அரசு மீண்டும் எடுத்து ஹிந்து அறக்கட்டளைகளுக்கே வேண்டும். நாட்டிலுள்ள எல்லா மத அறக்கட்டளை சொத்துக்களையும் மத்திய அரசு ஆவணப்படுத்தி வெளியிட வேண்டும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ