சென்னை,:சிறுதானிய உணவு வகைகளை ஊக்கப்படுத்த, ஆசிர்வாத் மில்லட்ஸ் நிறுவனம் மற்றும், 'தினமலர்' நாளிதழ் இணைந்து, 'மில்லட் மகாராணி' பட்டம் வழங்கும் மாபெரும் சிறுதானிய சமையல் போட்டியை, சென்னை கலைவாணர் அரங்கில் நாளை நடத்துகின்றன.நாடு முழுதும், 'மில்லட்' எனப்படும், கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, சாமை, திணை உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சிறுதானிய உணவு சமைப்பதில் பெண்களை ஊக்குவிக்கவும், அவர்களின் சமையல் திறனை உலகறிய செய்யவும், 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஆசிர்வாத் மில்லட்ஸ் இணைந்து, 'மில்லட் மகாராணி' பட்டம் வழங்கும் மாபெரும் சிறுதானிய சமையல் போட்டியை நடத்துகின்றன.இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நாளை நடக்கிறது.போட்டியில் பங்கேற்க விரும்பும் பெண்கள், தங்கள் வீட்டிலேயே சிறுதானியங்களில், சுவையான உணவை சமைத்து எடுத்து வர வேண்டும். ஆசிர்வாத் மில்லட் மாவு வகையில், உணவு சமைத்து வருவோருக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பிரபல, 'மாதம்பட்டி குரூப் ஆப் கம்பெனிஸ்' தலைவர் மாதம்பட்டி டி.பி.ரங்கராஜ் பங்கேற்கிறார்.அவரும், பிரபல சமையல் நிபுணர், 'செப்' தாமு மற்றும் சித்த மருத்துவ டாக்டர் கு.சிவராமன் ஆகியோர் சிறந்த தானிய உணவை தேர்வு செய்வர். நிகழ்ச்சிக்கு உணவு, 'ஸ்பான்சராக மாதம்பட்டி பாகஷாலா நிறுவனமும், 'அசோசியேட் ஸ்பான்சராக' மாம்பலம் ஐயர்ஸ் நிறுவனமும் இணைந்து செயல்படுகின்றன.இதுதவிர, 'கிப்ட் ஸ்பான்சராக' சத்யா மற்றும் ஹேன்பாவ் நிறுவனம், 'பியூட்டி ஸ்பான்சராக' ஸ்பின்ஸ் பிபி டால்க், ஸ்பின்ஸ் பிபி கிரீம்நிறுவனமும் இணைந்து செயல்படுகின்றன.முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்குமில்லட் மகாராணி மகுடம் சூட்டும் போட்டியில் பங்கேற்க ஏராளமான பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். போட்டியாளர்கள் நிகழ்ச்சி நடக்கும் கலைவாணர் அரங்கிற்கு காலை, 9:00 மணிக்குள் கட்டாயம் இருக்க வேண்டும். தாமதமாக வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.பதிவு செய்தவர்கள் தங்களின் பதிவு எண்ணை, 'ரெஜிஸ்ட்ரேஷன்' கவுன்டரில் தெரிவிக்க வேண்டும். போட்டி காலை சரியாக, 10:00 மணிக்கு துவங்கும். சிறுதானியத்தில் சைவத்தில் மட்டும் ஒரே ஒரு உணவு வகையை வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வர வேண்டும். போட்டியின் போது, காட்சிக்கு வைக்கப்படும் உணவுடன், 'ரெசிபி' மற்றும் தயார் செய்த விதம் குறித்து, நடுவர்களுக்கு விளக்க வேண்டும்.போட்டி நடக்கும் இடத்தில், சமைப்பதற்கான எந்த வசதிகளும் வழங்கப்படாது. பங்கேற்பாளர்கள்தங்களுக்கு வேண்டியவற்றை தாங்களே போதிய அளவு கொண்டு வர வேண்டும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.போட்டியாளருடன் வருபவர் அமர, தனி இட வசதி உண்டு.
ரொக்க பரிசு ரூ.50,000
போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு சிறப்பு பரிசாக, 'மில்லட் மகாராணி' பட்டம் வழங்கப்படும். அதனுடன் சேர்த்து, 50,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும்.முதல் மூன்று இடங்களுக்குள் வருவோருக்கு, 'ரெப்ரிஜிரேட்டர், டிவி, வாஷிங் மிஷின்' வழங்கப்படும். மேலும், 25 நபர்களுக்கு 'மிக்சி' பரிசாக வழங்கப்படும்.