உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனுமதி பெற்ற பின்னரே பேனர்; கட்சிகள் உத்தரவாதம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

அனுமதி பெற்ற பின்னரே பேனர்; கட்சிகள் உத்தரவாதம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அனுமதி பெற்ற பிறகே பேனர் வைக்கப்படும்' என உத்தரவாதம் அளித்து, அனைத்து கட்சிகளும் மனுதாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரத்தில் நடந்த தி.மு.க., பிரமுகர் இல்ல திருமணத்துக்கு, அமைச்சர் பொன்முடியை வரவேற்று, பேனர், கொடி கம்பங்கள் வைக்கப்பட்டன. அப்போது, இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன், மின்சாரம் தாக்கி பலியானான்; 2021ல் சம்பவம் நடந்தது.இதையடுத்து, சட்டவிரோதமாக பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தடுக்கவும், பலியான சிறுவனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரி, மோகன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். நிலுவையில் இருந்த இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ்பாபு அடங்கிய முதல் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே பேனர் வைக்கப்படும் என உத்தரவாதம் அளித்து, அனைத்து அரசியல் கட்சிகளும் மனுதாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், முதலாவதாக தி.மு.க., தரப்பில் மனுதாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

theruvasagan
ஜூலை 23, 2024 15:48

உத்திரவாதம் பித்தம் எல்லாம் கொடுப்பாங்க. அதை மீறியவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க.


Ramesh
ஜூலை 23, 2024 15:39

மரணமடைந்த சிறுவன் பொறுப்பில்லாமல் மின்சார கம்பியை பற்றி உயிரிழந்தான் அதனால் அவன் குடும்பத்தார் இழப்பீட்டுக்கு நாயாய் பேயாய் அலைய வேண்டியதிற்க்கிறது. கள்ள சாராயம் எடுத்திருந்தால் உடனடியாக பத்து லட்சம் வீடு தேடி வந்திருக்கும்.


K.Muthuraj
ஜூலை 23, 2024 13:06

அரசாங்க அனுமதி என்பது ஊழலுக்கு வித்து என்ற யதார்த்தம் தெரிந்தும் கோர்ட் இவ்வாறு கூறுவது தான் வேதனை.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 23, 2024 14:36

நீதிமன்றங்கள் செயல்படுவது பணம், அதிகாரம், செல்வாக்கு படைத்தவர்களுக்காக ........


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 23, 2024 11:59

சுபஸ்ரீ ரவி: அதிமுக பேனர் விழுந்து விபத்து: சென்னை இளம்பெண் பலி - கலைந்த கனடா கனவு .... இச் செய்தி 2019 வருடத்தியது .... எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அப்பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார் .... அதே அவலம் இவர் ஆட்சியிலும் தொடர்கிறது .... ஆக தமிழகத்தில் விடிய வாய்ப்பே இல்லை ....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 23, 2024 12:16

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?" என அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.


KRISHNAN R
ஜூலை 23, 2024 09:57

வாய்பில்லை.. ராஜா


பேசும் தமிழன்
ஜூலை 23, 2024 09:05

பேனர் வைப்பது... போராட்டம் நடத்துவது... கூடவே கூடாது என்று கூற வேண்டும்.. யாருக்கு அனுமதி கொடுப்பார்கள்... ஆளுங்கட்சி மற்றும் அவர்களது கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி கிடைக்கும்.


கூமூட்டை
ஜூலை 23, 2024 07:36

அரசியல் தக்காளிகள் இது காதுகள் கேட்காமல் இருக்கும். எந்த ஒரு செயலும் ஒரு எதிர்காலம் பாதிக்கும். வாழ்க வளமுடன் ஊழல்


GMM
ஜூலை 23, 2024 07:32

திமுக போன்ற அரசியல் கட்சிகள் தாமிர தகட்டில் உத்தரவாதம் கேட்டால் கூட எழுதி கொடுத்து விடுவார்கள். அனுமதி பெறுவது எளிது. விளம்பரம் தடுக்க முடியவில்லை என்றால், விதிகள் வகுக்க வேண்டும். விளம்பர பலகை அளவு, வீட்டின் எல்லை, சாலை மையத்தில் இருந்து தூரம், 500 மீட்டர் ஆரம் வரை உள்ள குடியிருப்பு, கடை சொந்தக்காரர் ஒப்புதல், ஒரு பேனருக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு லட்சம் வைப்பு நிதி, ஒரு மணிக்கு வாடகை, விபத்து நடந்தால் கட்சி நிதியில் இருந்து நிவாரணம்... மற்றும் பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ