மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
2 hour(s) ago
பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்
2 hour(s) ago
தகவல் ஆணையரை தரக்குறைவாக பேசிய நபருக்கு கண்டிப்பு
2 hour(s) ago
சென்னை : மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தி.மு.க., அரசு துரோகம் செய்துவிட்டதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சுமத்தியுள்ளார்.அவரது அறிக்கை:விக்கிரவாண்டியில் பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி, 'விழுப்புரம் மாவட்டத்தில் 60,000 பேர், மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்' என, கூறியுள்ளார். தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரத்தில், வெறும் 60,000 பேருக்கு மட்டுமே, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என, அனைத்து துறைகளிலும் விழுப்புரம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது.இங்கு குறைவான எண்ணிக்கையில் உரிமைத் தொகை வழங்குவது என்பது சமூக அநீதி; துரோகம். எனவே, விக்கிரவாண்டி மக்கள் இதைப் புரிந்து கொண்டு இடைத்தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago