உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை பிறந்த நாளில் பா.ஜ., சோகம்

அண்ணாமலை பிறந்த நாளில் பா.ஜ., சோகம்

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதி யில், தி.மு.க., - அ.தி.மு.க.,வும் போட்டியிட்டதால், மும்முனைப் போட்டி நிலவியது. கருத்துக் கணிப்புகளில் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.தமிழகம் உட்பட நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. அண்ணாமலைக்கு நேற்று பிறந்த நாள். அவருக்கு, மத்திய அமைச்சர் முருகன், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர், தொலைபேசி வழியாகவும், வலைதளங்களிலும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.அவருக்கு பிறந்த நாள் பரிசாக கோவையில் வெற்றி கிடைக்கும் என்று, பா.ஜ.,வினர் எதிர்பார்த்தனர். ஆனால், தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம், அண்ணாமலை வெற்றி வாய்ப்பை இழந்தார். இது, அண்ணாமலை உட்பட பா.ஜ.,வினருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை