உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதாரமின்றி பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டை கண்டிக்கிறோம்: ஆர்.எஸ்.எஸ்.,

ஆதாரமின்றி பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டை கண்டிக்கிறோம்: ஆர்.எஸ்.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆதாரமின்றி பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறோம் என ஆர்.எஸ்.எஸ்., மாநில ஊடகத்துறை செயலாளர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.இது குறித்து நரசிம்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் பற்றி ஏராளமான வதந்திகளையும் அவதூறுகளையும் சமூக விரோதிகள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். சங்கம் இது போன்ற அவதூறுகளுக்கு பதிலளிப்பது இல்லை என்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, ஆதாரமற்ற ஒரு அவதூறைப் பரப்பியுள்ளார். புதுடில்லியில் 3.5 லட்சம் சதுர அடியில் ரூ.4500 கோடி செலவில் சங்கத்தின் பிரமாண்ட அலுவலகம் கட்டப்படுவதாக பொய்யான பிரசாரத்தை வாசுகி ஆரம்பித்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.எந்தவித ஆதாரமும் இன்றிப் பரப்பப்படும் இந்த பொய்க் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். திட்டமிட்ட அவதூறைப் பரப்பும் வாசுகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Subramanian
ஏப் 09, 2024 21:07

தற்பொழுதைய தேர்தல் நிதி பத்திர -வழக்கை நடத்தி உண்மையை கொண்டு வந்தவர்கள் கம்யூனிஸ்ட்


Raja Guru
ஏப் 09, 2024 13:20

அப்படி என்றால் அந்த கட்டிடம் யாருடையது


Ramanujadasan
ஏப் 08, 2024 16:18

கம்யூனிஸ்ட் காரர்களை போலவே சங்கத்தை நினைத்ததன் விளைவு அவர்கள் தானே ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவிடம் காசு வாங்கி கொண்டு கட்சியை அடகு வைத்தவர்கள் ?


M S RAGHUNATHAN
ஏப் 08, 2024 16:15

மன்னிப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது அப்போது தான் இங்கு திமுகவின் வெறுப்பு பிரச்சாரம் அடங்கும்


N.Purushothaman
ஏப் 08, 2024 16:15

எல்லாம் பயம் தான் காரணம் …தேர்தல் முடியும் வரை இந்த பொய் பிரச்சாரங்கள் தேசவிரோதிகளால் மிக கடுமையாக முன்னெடுப்பார்கள்


M S RAGHUNATHAN
ஏப் 08, 2024 16:13

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை தவறாக இருப்பின் தயவு செய்து அவமதிப்பு வழக்கு தொடரவும் ஹிந்துக்களை கிள்ளுக் கீரையாக நினைக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படவேண்டும்


Gopal
ஏப் 08, 2024 16:09

இந்த கம்யூனிஸ்ட் வந்தேறிகளை நாட்டை வெட்ட விரட்டி அடிக்க வேணடும் இந்த மாதிரி கட்சிகளால் நாட்டுக்கு எந்த வித நன்மையும் இல்லை


ஆரூர் ரங்
ஏப் 08, 2024 16:07

கம்யூனிஸ்டு யூனியன் மாணவர்கள் செய்த 29 மணி நேர சித்ரவதையால் கேரள கால்நடைப் பல்கலைக்கழக மாணவர் சித்தார்த்தன் தற்கொலை. இதைப்பற்றி இந்த வாசுகி பேசவே மாட்டார். மட்டமான இயக்கம் .


ஆரூர் ரங்
ஏப் 08, 2024 15:56

அப்பா அம்மா காலத்திலேயே சீன ரஷ்ய தூண்டுதலில் பொய்ப் பிரச்சாரத்தை துவக்கினார்கள்


Duruvesan
ஏப் 08, 2024 15:41

சங்கிகளின் மிரட்டல் எடுபடாது ,vidiyal கூவல்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை