உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இல்லம் தேடி கல்வி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் பணி

இல்லம் தேடி கல்வி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் பணி

சென்னை : பள்ளிக்கல்வி துறை சார்பில், 2021ல், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவில், வீடுகளுக்கு அருகிலேயே மாணவர்களை சந்தித்து, அவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இதற்காக. மாநிலம் முழுதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், தன்னார்வலர்களாக பணியில் சேர்க்கப்பட்டனர். கொரோனா காலத்தில் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல், இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதனால், இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மீண்டும் தாங்கள் பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.இதற்கிடையில், இத்திட்டத்தில் பணியாற்றிய தன்னார்வலர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம், 'எமிஸ் டேட்டா' பதிவு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி