உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரந்துார் ஏர்போர்ட் கட்டுமானம்: 2026 ஜனவரியில் துவக்கம்

பரந்துார் ஏர்போர்ட் கட்டுமானம்: 2026 ஜனவரியில் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் சென்னையின் இரண்டாவது விமான நிலைய கட்டுமான பணிகளை, 2026 ஜனவரியில் துவக்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வரும் பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, அதிக விமானங்கள் வந்து செல்ல வசதியாக, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக தமிழக அரசின் டிட்கோ செயல்படுகிறது.விமான நிலையம் அமைப்பதற்காக, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,321 ஏக்கர் நிலம் தேவை. தற்போது, வருவாய் துறை வாயிலாக நிலம் எடுப்பு பணி முழுவீச்சில் நடக்கிறது.விமான நிலைய திட்டத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தவிர, பல துறைகளின் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. பரந்துார் விமான நிலைய திட்டம் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. மொத்த திட்ட செலவு 29,150 கோடி ரூபாய். அதன்படி, முதல் கட்டத்தில், 2029 முதல், ஆண்டுக்கு இரண்டு கோடி பயணியரை கையாள திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, முதல் கட்ட கட்டுமான பணிகளை, 2026 ஜனவரியில் துவக்கி, 2028 டிசம்பரில் முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.இரண்டாம் கட்டமாக, 2036ல் கூடுதலாக மூன்று கோடி பயணியரை கையாளவும், அதற்கான பணிகளை 2033 ஜனவரியில் துவக்கி, 2035 டிசம்பரில் முடிக்கப்பட உள்ளது. மூன்றாம் கட்டம், 2041 - 42; இறுதி கட்ட பணிகளை, 2044 - 46ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணி முடிந்ததும், 2047ல் பரந்துார் விமான நிலையம் ஆண்டுக்கு, 10 கோடி பயணியரை கையாளும் திறன் உடையதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ManiK
ஜூலை 26, 2024 20:26

Total waste of tax payer money. Why chennai needs so many airports? Develop other cities and hubs in the state...unfortunate not to hear any news on that!!


Ray
ஜூலை 26, 2024 06:38

மெட்ரோ நிலையம் விமான நிலையத்துக்குள்ளேயே பூமிக்கடியில் அமைக்கப்படவேண்டும் மீனம்பாக்கத்தில் உள்ளதுபோல தொலைதூரத்தில் இருக்கலாகாது ஆலந்தூரிலிருந்து மெட்ரோவுக்கு மேற்க்கூரை அமைத்தார்கள் இந்த வயாடக்ட்டுக்கு பதில் அண்டர் கிரவுண்ட் செலவு குறைவு


Mani . V
ஜூலை 26, 2024 05:44

விளைநிலங்களையும், இயற்கை வளங்களையும் அழித்தொழித்து நாடு முழுவதுமே விமான நிலையங்களை கட்டி விட்டு, சோத்துக்கு சிங்கி அடிப்போம். வாழ்க மக்களுக்கு கெடுதல் மட்டுமே செய்யும் திராவிடக் கட்சிகள்.


Ray
ஜூலை 26, 2024 06:32

மக்கள் சோற்றால் அடித்த பிண்டங்களாகவே இருக்கலாகுமா?


karthik
ஜூலை 26, 2024 08:59

ஒன்னு செய்... நீ கல்யாணம் பண்ணிக்காத குழந்தை பெத்துக்காத நீயும் எங்கயாச்சும் கிராமத்தில் ஊற விட்டு வெளியவே வராம வாழ்ந்துட்டு போயிரு.. அப்படி எல்லாரும் இருந்துட்டா எதுவுமே தேவை இல்லை..


Kasimani Baskaran
ஜூலை 26, 2024 05:37

தமிழக அரசு சம்பந்தப்பட்டு இருப்பதால் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் போல யாரும் போக வசதியில்லாத அளவில் இருக்க வாய்ப்பு உண்டு. திருச்சியில் இறங்கி விரைவாக சென்னை வந்து விடமுடியும் என்று கூட நிலைமை வரலாம்...


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி