மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் சுருண்டு விழுந்து பலியானார்.ராமநாதபுரம் அருகே அண்ணா பல்லை இன்ஜினியரிங் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம் உள்ளது. இதில் பரமக்குடி தாலுகா எஸ்.ஐ., ரவிச்சந்திரன் 59, நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் இருந்தார். இரவு 10:00 மணிக்கு திடீரென சுருண்டு விழுந்து மயங்கினார். உடன் பணியில் இருந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ரவிச்சந்திரன் உடலுக்கு சந்தீஷ் எஸ்.பி., அஞ்சலி செலுத்தினார்.ரவிச்சந்திரன் சாயல்குடியை சேர்ந்தவர். 1986 ஜன.,17 ல் பணியில் சேர்ந்துள்ளார். உஷாராணி என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
8 hour(s) ago | 1
9 hour(s) ago
9 hour(s) ago