உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம் : கோடை விடுமுறையில் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்தத்தில் புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள்.பின் கோயிலில் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கடல் அழகு, புயலில் இடிந்த கட்டடங்களை கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh
மே 13, 2024 12:51

என்னத்துக்கு கோவில்களில் போய் சாமி கும்பிடுகிறீர்கள்? அதையே ஓட்டு போட மொத்த கூட்டமும் போயிருந்தால் திராவிட நாசகார சக்திகளுக்கு சங்கு ஊதியிருக்கலாம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை