மேலும் செய்திகள்
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
28 minutes ago | 4
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
41 minutes ago
சென்னை:லோக்சபா தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க.,வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கான வேட்பாளர்களை பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டார்.வேட்பாளர்கள் விபரம்:1. திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, பி.காம், மாநில பொருளாளர் 2. அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, பி.காம். பி.எல், கட்சி செய்தி தொடர்பாளர்3. ஆரணி - அ.கணேஷ் குமார், பி.இ., பிஎச்.டி., முன்னாள் எம்.எல்.ஏ.,- திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலர்4. கடலுார் - சினிமா இயக்குனர் தங்கர்பச்சான், டி.எப்.டெக்,5. மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி., தஞ்சை வடக்கு மாவட்ட செயலர், 6. கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்., முன்னாள் எம்.பி., - மாநில துணைத் தலைவர்,7. தர்மபுரி - அரசாங்கம், பி.காம்., தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலர்8. சேலம் - ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்., சேலம் தெற்கு மாவட்ட செயலர்.9. விழுப்புரம் - முரளி சங்கர், பி.காம்., மாணவரணி மாநிலச் செயலர்அன்புமணி போட்டியில்லை
* கடந்த 2014, 2019 லோக்சபா தேர்தல்களில், தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி, 2014ல் வெற்றி பெற்றார். ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை * அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, 2019ல் விழுப்புரத்தில் போட்டியிட்ட பா.ம.க., வடிவேல் ராவணன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. யாரும் எதிர்பாராத வகையில், கடலுார் தொகுதியில் சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் களமிறக்கப்பட்டுள்ளார்.
28 minutes ago | 4
41 minutes ago