உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யணும்!

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யணும்!

நீட் தேர்வு ஊழல் மிகுந்தது. இதை நாங்கள், 4- - 5 ஆண்டுகளாகவே கூறி வருகிறோம். தமிழக அரசு, நீட் தேர்வு தேவையில்லை என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனாலும், அதை யாரும் கண்டு கொள்ளவில்லை.மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் தகுதிக்காக, நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதை துவக்கத்தில் இருந்தே பலரும் எதிர்க்கின்றனர். மாநில அரசின் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்க, மாநில அரசுகளே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளும் முறை தான் சரியானது.அதை விடுத்து, மத்திய அரசின் ஏஜென்சி வாயிலாக தேர்வு நடத்துகின்றனர். எப்படியாவது மருத்துவப் படிப்பில் நுழைந்து விட வேண்டும் என்று, நாடு முழுதும் இருந்து மாண வர்கள் மோதும்போது, தேர்வில் முறைகேடுகளும், தவறுகளும் நடக்கத்தான் செய்யும்.அப்படித்தான், தவறுகள் தொடர்கின்றன. அதற்காக, தவறு நடப்பதை ஏற்க முடியாது. முறையாக தேர்வை நடத்த முடியாத, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தவறுகளுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். -ப.சிதம்பரம்காங்., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை