உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானை வழித்தடத்தை ஆக்கிரமித்ததா ஈஷா? அமைச்சர்கள் காரசார வாதம்

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்ததா ஈஷா? அமைச்சர்கள் காரசார வாதம்

சென்னை : யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்துள்ளதா என்பது குறித்து, அமைச்சர்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர்.சட்டசபையில் வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், யானைகள் வழித்தடம், பாதுகாப்பு குறித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனக்கு எதிரே அமர்ந்திருந்த காங்., - எம்.எல்.ஏ., ஹசன் மவுலானாவை அழைத்து, ஏதோ கூறினார். உடனே, அவர் தன் இருக்கைக்கு சென்றார். அவருக்கு பேசும் வாய்ப்பையும், சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டு, துரைமுருகன் பெற்றுக் கொடுத்தார்.அப்போது நடந்த விவாதம்:ஹசன்: யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டு, சாலைகளும் போடப்பட்டு உள்ளன. அங்கு யானைகள் வழித்தடம் என்று முறையாக குறிப்பு எழுதப்படவில்லை. கோவை ஈஷாவிலும் யானைகள் வழித்தடத்தை மறைத்துள்ளனர்.அமைச்சர் மதிவேந்தன்: யானைகள் வழித்தடம் தொடர்பாக யாருக்கும் முழு அறிவு இல்லை. இதில், நிறைய விஷயங்கள் உள்ளன. இதை தெளிவுப்படுத்த வேண்டும். யானைகள் வழித்தடம் குறித்து, மக்களிடம் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.அமைச்சர் துரைமுருகன்: யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது குறித்து, பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வந்துள்ளன. வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டடங்களையும் கட்டியுள்ளனர். கோவை ஈஷா யோகா மையம், வனத்துறை அனுமதி பெற்று தான் கட்டடங்கள் கட்டியதா; யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளதா; வன நிலங்களில் கைவைத்துள்ளனரா என்பது குறித்து நேரடியான பதிலை எம்.எல்.ஏ., கேட்கிறார்.மதிவேந்தன்: யானை வழித்தடங்கள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக, முயற்சி எடுத்து வருகிறோம். முழுமையாக விவரம் தெரிந்த பின் தான் ஈஷா குறித்து கருத்து சொல்ல முடியும். எதுவும் தெரியாமல் சொல்ல முடியாது. ஆய்வு செய்த பின்தான், முறையான அனுமதி பெற்றனரா என்பது தெரியவரும்.துரைமுருகன்; நீங்கள் பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. இதுவரை ஆய்வு செய்யவில்லையா என எம்.எல்.ஏ., கேட்கிறார்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kundalakesi
ஜூன் 26, 2024 22:31

காருண்ய கண்ணை மறைத்து விட்டதா அமைச்சர் பெருமக்களே


Kundalakesi
ஜூன் 26, 2024 22:26

சரி திமுக ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் தானே. இருந்துட்டு போவட்டும். அறநிலைய துறை மட்டும் எதற்கு. கோவில் உண்டியல் காணிக்கை மற்றும் வருவாயை ஆட்டயப்போடவா


Mani . V
ஜூன் 26, 2024 17:12

சே, சே, யார் அப்படி அபாண்டமாகச் சொன்னது? யானைகள்தான் மறு அவதாரத்தின் கோவில் எல்லைக்குள் அத்து மீறுகிறது. தன் சிலையை, சிவன் சிலை என்று நம்பவைத்தவருக்கு வாழ்த்துக்கள்.


Neutrallite
ஜூன் 26, 2024 11:28

வண்டு முருகனுக்கும் காட்டு அமைச்சருக்கும் என்ன தகராறு...ஏன் இப்டி இன்னொருத்தர் கேள்வி கேக்க வெச்சு தானும் உள்ள புகுந்து தாக்குறாரு. 2 திருடங்களுக்குள் சண்டை... ஆனா போலீஸ் தான் தூங்குதே ...


Ravi.S
ஜூன் 26, 2024 10:14

காருண்யா கல்வி குழுமங்கள் பற்றி விவாதிக்க மாட்டார்களா?


Muguntharajan
ஜூன் 26, 2024 10:13

வனத்துறை முறையான அனுமதி வழங்கியதா என்று ஆய்வு செய்ய என்ன இருக்கிறது? தமிழ்நாடு வனத்துறை கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கிய லிஸ்டை பார்த்தாலே தெரியுமே?


Sankaran
ஜூன் 26, 2024 10:09

அரபு நாடுகளில் இந்துக்களாக நிலம் ஒதுக்கி கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் dravida model அரசு இந்துக்களின் கோவில்களை மட்டும், bull dozer மூலமாக இடித்து தள்ளுகிறது. இந்து அறகக்கட்டளையின் இடத்தை மட்டும் நொண்டி சாக்கு சொல்லி அகற்ற முயற்சிக்கிறது. திராவிட இந்துக்கள் விழித்துக் கொள்ளும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 26, 2024 20:23

, திராவிட ஹிந்துக்கள் விழித்துக்கொள்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. விழித்து இருந்தால் திருமாவளவனும், ராஜாவும், மதுரை உண்டியல் குளிக்கியும், கோவில்களை இடித்தேன் என்று மேடையிலேயே சொன்ன பாலுவும் ஜெயித்து இருக்க மாட்டார்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை