மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
18 minutes ago
சென்னை:'தமிழகம் எதிலும் முதலிடம் என்பதற்கு, மத்திய அரசின் ஆவணங்களே சாட்சி. 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி, இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது' என, தி.மு.க., தலைமை பெருமிதம் தெரிவித்துள்ளது.இது குறித்து, தி.மு.க., தலைமையின் அறிக்கை:மகப்பேறுக்கு பின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவை அனைத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும், வரைபடங்களும் தெளிவுபடுத்துகின்றன.மத்திய அரசு அறிக்கையில், 'நாடு முழுதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழகம் மட்டும், 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து, மஹாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் பராமரிப்புடன் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில், 3.31 புள்ளிகளை பெற்று இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழகத்தில் தான் அதிகம். குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும், குழந்தைகளை பராமரித்து காப்பதிலும், தமிழகம் தான் முன்னணியில் உள்ளது.தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில், மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்பு பொருளாதார மண்டலங்கள். இதில், தமிழகம் தான் அதிக அளவில், 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.பிரதமர் மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில், 21 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன. தமிழகம் எதிலும் முதலிடமும், அதைத் தொடர்ந்து, பல்வேறு சிறப்புகளையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக, மத்திய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சி.முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே, இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18 minutes ago