உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போன் அழைப்பை நம்பி ஏமாறாதீர்! பல்கலை துணைவேந்தர் அறிவுரை

போன் அழைப்பை நம்பி ஏமாறாதீர்! பல்கலை துணைவேந்தர் அறிவுரை

சென்னை:அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டி:அண்ணா பல்கலையில் ஆன்லைன் வழியே கவுன்சிலிங் நடக்கிறது. சில கல்லுாரிகள் மாணவர்களின் மொபைல் எண்ணை எப்படியோ வாங்கி, அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து, தங்கள் கல்லுாரியை முதல் தேர்வாக தேர்வு செய்ய வைக்கின்றன.இந்த ஆண்டு மூன்று மாணவர்கள், 190 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்துள்ளனர். அவர்களுக்கு அண்ணா பல்கலையில் அல்லது முதல் 10 இடங்களுக்குள் உள்ள கல்லுாரியில் இடம் கிடைக்கும். ஆனால், 100வது ரேங்கில் உள்ள கல்லுாரி, கட்டணம் இலவசம் எனக்கூறி, தங்கள் கல்லுாரியை தேர்வு செய்ய வைத்துஉள்ளது.அப்படி தேர்வு செய்த பின் வந்து, மாற்ற முடியுமா என்று கேட்கின்றனர். அப்போது எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது, 178 மதிப்பெண் எடுத்தவர்களுடன், கவுன்சிலிங்கில் பங்கேற்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கல்லுாரியில் கட்டணம் இல்லை எனக்கூறி மாணவர்களை சேர்த்து, முதல் ஆண்டு கட்டணம் கேட்பதில்லை. அடுத்த ஆண்டுகளில் முழு கட்டணம் செலுத்தும்படி கூறுவதாகவும் புகார்கள் வருகின்றன. கல்லுாரியில் படிக்க கல்விக்கடனை பல வங்கிகள் கொடுக்கின்றன. நல்ல கல்லுாரியில் படித்தால், படிப்பு முடித்த ஒன்றரை ஆண்டுகளில் அதை செலுத்தி விட முடியும்.கட்டணம் இலவசம் எனக்கூறி, வசதி இல்லாத கல்லுாரியில் படித்தால், நல்ல வேலை கிடைக்காது. ஒரு சிறு தவறால் வாழ்நாள் முழுதும் பயன் இன்றி போய்விடும். தங்கள் குழந்தைகள் எந்த கல்லுாரியை தேர்வு செய்கின்றனர் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். ஏமாற்றும் நபர்களிடம் சென்று ஏமாற வேண்டாம். கல்லுாரிகளை தேர்வு செய்யும் போது, முதல் மூன்று சாய்சிலும், நல்ல கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும்.ஒரே பேராசிரியர் பல கல்லுாரிகளில் பணியாற்றுவது போல் காண்பித்த விவகாரத்தில், 295 கல்லுாரிகளிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. பெரும்பாலான கல்லுாரிகள் விளக்கம் அளிக்க நேரம் கேட்டுள்ளன. கல்லுாரிகளில் இருந்து மாணவர்களை சேரும்படி அழைத்தால், அந்த கல்லுாரியில் தரம் இல்லை என்று அர்த்தம். அதில், சேருவதை தவிர்த்து விடலாம். நல்ல கல்லுாரிகள் மாணவர்களை தேடி செல்லாது; மாணவர்கள் தான் தேடி செல்வர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ