உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலை பழனிசாமிக்கு தடையில்லை

இரட்டை இலை பழனிசாமிக்கு தடையில்லை

சென்னை:'அ.தி.மு.க., வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்து, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். தனக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்; இல்லையெனில் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என, பன்னீர்செல்வம் சார்பில் தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டது. 'தேர்தல் கமிஷனில் உள்ள ஆவணங்களில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி என்று தான் உள்ளது. எனவே, அ.தி.மு.க., வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை இல்லை' என, தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை