உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் மோதி ஊழியர் பலி

பஸ் மோதி ஊழியர் பலி

மயிலாடுதுறை: திருக்கடையூரில் டூரிஸ்ட் பஸ் மோதி, தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜன்.30; தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணியில் இருந்து பைக்கில் சொந்த ஊர் நோக்கி சென்று கொண் டிருந்தார். திருக்கடையூரில் சென்ற போது, எதிரே வந்த டூரிஸ்ட் பஸ் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிங்கராஜன் உயிரிழந்தார்.பொறையார் போலீசார் வழக்கு பதிந்து, புவனகிரியை சேர்ந்த டூரிஸ்ட் பஸ் டிரைவர் சக்திவேலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை